Indian's Like Unlimited Internet: அளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்
இயற்கையின் வரம் – தென்னை!
என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை
என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2013 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 33வது கோர்ஸில் சேர (எஸ்எஸ்சி- நான்டெக்னிக்கல்), என்சிசி சி சான்றிதழ் பெற்ற தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 58 (ஆண்-50, பெண்-8). 10 சதவீத காலியிடங்கள் போர்க்களத்தில் காய மடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. வயது: 19 லிருந்து 25க்குள்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சீனியர் டிவிஷனில் குறைந்த பட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக் கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, குழுத் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்களுக்கு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 11 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடித்தவர்கள் ராணுவத்தில் லெப்டினன்ட் அந்தஸ்தில் அமர்த்தப்படு வார்கள். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள OC, NCC Unitக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.1.
Employment Opportunities
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 728 காலியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளார்க் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க் - 728
கல்வித் தகுதி: 65 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே கிளார்க் பணிக்காக ஐ.பி.பி.எஸ். நடத்திய பொதுத் தேர்வில் பொதுப் பிரிவினர்கள் 120 மதிப்பெண்களும், எஸ்.சி./ எஸ்.டி./ ஓ.பி.சி. பிரிவினர்கள் 105 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28க்குள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2012
மேலும் விவரங்களுக்கு: www.iob.in
ராஜா ரமணா சென்டரில் டிரெய்னி பணியிடங்கள்
ராஜா ரமணா சென்டரில் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி - 21
கல்வித் தகுதி: இயற்பியல்/ கணிதம்/ வேதியியல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.எஸ்சி. பட்டம் அல்லது எலெக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/ எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 24க்குள்
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.08.2012
மேலும் விவரங்களுக்கு: www.cat.gov.in
எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் - 100
கல்வித் தகுதி: ரேடியோ மற்றும் டி.வி. டெக்னாலஜி/ எலெக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்/ கம்ப்யூட்டர்/ எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25க்குள்
பணி: ஹெட் கான்ஸ்டபிள் - 959
கல்வித் தகுதி: ரேடியோ மற்றும் டி.வி./ எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 23க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2012
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் தேர்வு
Tamilnadu Transport Subordinate Serviceல் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.
பணி: மோட்டார் வாகன ஆய்வாளர் - 17
கல்வித் தகுதி: ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடவே ஆட்டோமொபைல் பட்டறையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32க்குள்
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 25.07.2012
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள் - 34
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது: 23க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2012
மேலும் விவரங்களுக்கு: www.cisf.nic.in
பிளஸ் டூ படித்தவர்கள் ஐஐஎம்ல் படிக்க வாய்ப்பு!
பட்டப் படிப்பு படித்த பிறகு சட்டப்படிப்பு என்ற காலம் மாறி ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்த சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ் போன்ற படிப்புகளில் தற்போது பிளஸ் டூ முடித்த மாணவர்களும் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்....இப்படி பல்வேறு ஒருங்கிணைந்த படிப்புகள் வந்து விட்டன. இதேபோல ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப் படிப்புகளும் வரத் தொடங்கி விட்டன. ஆர்வமிக்க, திறமையான மாணவர்களை இளநிலைப் பட்ட நிலையிலேயே ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளின் பக்கம் ஈர்க்கும் முயற்சியின் வெளிப்பாடுதான் இது. இந்த நிலையில், பிளஸ் டூ முடித்த மாணவர்களும் நேரடியாக ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஓருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை இந்தூரில் உள்ள ஐஐஎம் வழங்குகிறது. எதிர்காலத்தில் சிறந்த நிர்வாகிகளாக விரும்பும் மாணவர்களை, பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற நிலையிலிருந்தே தயார்படுத்துவதற்காக இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தியரிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள்.
இந்தப் படிப்பில் சேர என்ன தகுதி வேண்டும்?
இந்தப் படிப்புக்கு மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
இந்தப் படிப்பில் என்ன கற்றுத் தருவார்கள்?
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடங்களுடன் மேனேஜ்மெண்ட் பாடங்களும் இருக்கும். கணிதம், புள்ளியியல், லாஜிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல் மற்றும் இலக்கிய அறிமுகம், தேசிய மற்றும் சர்வதேசிய நாகரிக வரலாறு, பயாலஜிக்கல் சயின்சஸ் ஆகியவையும் கற்றுத்தரப்படும் பாடங்களில் அடங்கும். ஒரு வெளிநாட்டு மொழியும் ஒரு இந்திய மொழியும் குறித்த அறிமுகம் இருக்கும். லீடர்ஷிப் டெவலப்மெண்ட், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், டீம் ஒர்க், கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றிலும் படிப்புக் காலத்தில் கவனம் செலுத்தப்படும். அக்கவுண்டிங், ஃபைனான்ஸ், ஆர்கனைசேஷன் பிகேவியர் டெசிஷன் சயின்ஸ், ஆபரேஷன்ஸ் அண்ட் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் எகனாமிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூனிக்கேஷன், லீகல் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் பிசினஸ், நெறிகள் (எத்திக்ஸ்), கார்ப்பரேட் கவர்னன்ஸ், கார்ப்பரேட் சோஷியல் செக்யூரிட்டி, பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி , இன்டர்நேஷனல் பிசினஸ் ஆகிய மேனேஜ்மெண்ட் தொடர்பான பாடங்களும் இருக்கும். இதுதவிர, இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சர்வேதச அளவில் விஷயங்களை அறிந்துகொள்ள வாய்ப்புகளும் இருக்கும். அத்துடன், பல்வேறு அமைப்புகளில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதாவது, ஐந்து ஆண்டு காலத்தில் சிறந்த மேனேஜ்மெண்ட் புரபஷனலை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஐந்தாவது ஆண்டின் முடிவில் Integrated Diploma in Management (IDM) என்று சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இங்கு படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பட்டப் படிப்பை முடித்து விட்டு ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கொத்திக்கொண்டு போக பிரபல நிறுவனங்கள் காத்திருக்கும்போது, இந்த ஒருங்கிணைந்த மேனேஜ்மெண்ட் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்காதா என்ன? மிகச் சிறந்த கல்வி நிறுவனம். தலை சிறந்த ஆசிரியர்கள். நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். ஆர்வமிக்க மாணவர்கள் இப்போதே உங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
விவரங்களுக்கு:www.iimidr.ac.in
நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!
'யார் எந்தப் பரிந்துரை செய்தாலும் தகுதியின் அடிப் படையில்தான் சத்துணவு அமைப்பாளர் நியமனம் நடக்கும்’ என்று, தான் நினைத்ததை சாதித்தும் விட்டார் கலெக்டர் என்ற கழுகார், 'அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் இப்படி நடக்க ஆரம்பித்தாலே, நாடு சுபிட்சம் அடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்!
நாடு அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுமா, திருந்துவதற்குத்தான் விட்டு விடுவார்களா நம்முடைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும். நம்முடைய இதழ் வெளியான கடந்த சனிக்கிழமை அன்று, 'பாலாஜியின் பதவிக்கு வேட்டுவைக்கப்பட்டுவிட் டது. அவருக்கு எந்தப் பதவியும் ஒதுக்கப்படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக் கப்பட்டு உள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பாலாஜி முதன்முதலில் சேரன்மகாதேவி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். மணல்கடத்தல் கும்பல் மீது எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக அப் போதே பரபரப்பாகப் பேசப்பட்டார். பின்னர் தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையில் துணை கமிஷனராகப் பணியாற்றினார். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், விருதுநகர் மாவட்டகலெக்டராக நியமிக்கப்பட்டார். வந்த நாளில் இருந்தே ஊழல் மற்றும் முறைகேடுகளில் புரையோடிக்கிடந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில், கலெக்டர் பாலாஜியின் அதிரடிகளை எதிர்த்து அரசு ஊழியர் சங்கம் போராட்டங்கள் நடத்தியது. பின்னர் மக்கள் கோபத்துக்குப் பயந்து மனம் மாறி, பாலாஜிக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தொடங்கினர்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற பகுதிகளில் அதிரடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாவட்டத்தில் காலியாக இருந்த பல பணி இடங்களுக்கு முறையாகத் தேர்வு நடத்தி, ஆட்களை நியமனம் செய்தார்.
வருவாய்த் துறை மற்றும் ஊரகத் துறை வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் பாலாஜியின் பேச்சில் அனல் பறக்கும். 'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப் பதற்குச் சமம்’ என்று சொல்லி ஒழுங்கீனமாகச் செயல்படும் அதிகாரிகளை மீட்டிங்கில் வறுத்து எடுத்துவிடுவார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ஒருவர், கலெக்டர் பெயரைச் சொல்லி கான்ட்ராக்ட் ஆசாமிகளிடம் பணம் பறித்து வந்தார். கலெக்டர் பங்களாவுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என்று வசூல் வேட்டையில் இறங்கினார். தகவல் தெரிந்ததும், அவரைக் கண்டித்து, மெடிக்கல் லீவில் போகச் சொன்ன கையோடு, அவரது அறையைப் பூட்டி விட்டார் கலெக்டர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூல் குறித்துப் புகார் வந்தது. உடனே, அந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்து, கூடுதல் கட்டணத்தை பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், பள்ளி நிர்வாகம் மசியவில்லை. அதனால், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளித் தாளாளர் உட்பட ஆறு பேர் மீது மோசடி வழக்குப் பதிவானது. தமிழகத்தில் இப்படி ஒரு வழக்குப்பதிவு நடந்திருப்பது இங்கு மட்டும்தான்.
பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்பு திட்டங்களில், பயனாளிகளைத் தேர்வு செய்வதில் தொடங்கி கமிஷன் வாங்குவது வரை பல முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் 'செக் பவர்’ பறிக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே கன்சாபுரத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், மின் தடை காரணமாக பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. 'ஒரு மாதத்துக்கு சீரான மின்சப்ளை இல்லை என்றால், பயிர்கள் வீணாகிவிடும்’ என்று கோரிக்கை வைத்தனர். உடனே, கன்சாபுரம் பகுதியில் மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்குவதற்கு மின் வாரியத் தலைவரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தந்தார். இதில் சிக்கல் ஏற்படுத்த முயன்ற தென்மண்டல மின் பகிர்மான உயர் அதிகாரி மற்றும் விருதுநகர் மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரியையும், தனக்கு உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் பவரைப் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வந்தார்.
இதுபோல, ஏகப்பட்ட அதிரடிகளை நடத்திய பாலாஜியைக் கண்டு ஆளும் கட்சியினர் அதிர்ந்து நின்ற நேரத்தில்தான், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்த நியமனத்துக்கு என சில விதிமுறைகள் இருந்தாலும், ஆளும் கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டும் நபர்களுக்குத்தான் வேலை கிடைக்கும் என்பது நடைமுறை. அதனால் ஆளும் கட்சியினர், ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் இறங்கினர்.
இது, பாலாஜி காதுக்குப் போனதுமே, விருதுநகர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார். அதில், 'சத்துணவுப் பணியாளர்கள் நியமனம் முறையாக நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். ஏழைகள் தேர்வு செய்யப்பட்டால்தான், ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்கும். எனவே, இந்த நியமனத்தில் நீங்கள் அரசுக்கு முழுஆதரவு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.
அதோடு நிற்காமல், சத்துணவுப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், 'யாராவது அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் சிபாரிசோடு வந்தால், மூன்று ஆண்டு காலம் எந்த அரசுப்பணிக்கும் செல்ல முடியாதபடி அவர்கள் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 10-ம் வகுப்பும், சமையலருக்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சியும், சமையல் உதவியாள ருக்கு 5-ம் வகுப்பும் கல்வித்தகுதி ஆகும். ஆனால், இந்த வேலையில் சேருவதற்கு டிகிரி படித்தவர்களும் விண்ணப் பித்தனர். அதனால் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய முதலில் மூன்று பேர் அடங்கிய 41 குழுக்கள் அமைக்கப்பட்டன. 'விண்ணப்பதாரர் உண்மையிலே ஏழையா அல்லது நடிக்கிறாரா? கணவர் எங்கே வேலை செய்கிறார்? குடும்பத்தின் மொத்த சம்பளம் எவ்வளவு? சொந்த வீட்டில் வசிக்கிறாரா? என்று பல கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்று உத்தரவு போட்டார். அதன் அடிப்படையில்தான் இன்டர்வியூக்கு வரும் பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
வயதுக்கு 12 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 3, வேலை வாய்ப்பு சீனியாரிட்டிக்கு 19, விதவை, கணவனால் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு 20, வறுமை நிலைக்கு 15, குடும்ப நிலைக்கு 10, நேர்முகத் தேர்வு செயல்பாட்டுக்கு 6 என்று மொத்தம் 85 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி ஜூன் 23 முதல் 26 வரை இன்டர்வியூ நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும், தாங்கள் கொடுக்கும் லிஸ்ட்டும் இடம் பெறவேண்டும் என்று ஆளும் கட்சியினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், ஜூன் 27 அன்று காலை 7 மணிக்கு அலுவலகம் வந்த பாலாஜி, மெரிட் அடிப்படையில் தேர்வான 1,006 பேருக்கும் ஒரே நேரத்தில் கையெழுத்துப் போடத் தொடங்கினார். அத்தனை கடிதங்களையும் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவிட்டுத்தான் கிளம்பினார்.
கலெக்டர் கையெழுத்துப் போட்டுக்கொண்டு இருந்த நேரத்தில், அந்தத் தகவல் அறிந்து தலைமைச் செயலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி போன் செய்தாராம். சத்துணவு நியமனம் தொடர்பான விஷயம் என்பதைப் புரிந்து கொண்டதால் பாலாஜி போனை எடுக்கவில்லை என்கிறார்கள். செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோதும் பேசவில்லை. முழுமையாக கையெழுத்துப் போட்டு, கடிதங்களை அனுப்பிய பிறகுதான் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிக்கு போன் செய்தாராம் பாலாஜி. அப்போது எதிர்முனையில் போன் எடுக்கப்படவில்லை. அந்தக் கோபத்தில்தான், டிரான்ஸ்ஃபர் உத்தரவு உடனே தயாரானது என்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் உயர் அதிகாரிகள், ''ஆளும் கட்சி அமைச்சர் முதல் அரசுத் துறை செயலாளர் வரை பலரும், 'ஆளும் கட்சி லிஸ்ட்டில் இருந்தும் சிலருக்கு நியமனம் போட வேண்டும்’ என்று கேட்டார்கள். ஆனால், 'அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்று எல்லாரையும் நிராகரித்துவிட்டார் கலெக்டர். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாலாஜியின் வீட்டுக்கே சென்று சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். பாலாஜி அதைக் கையில்கூட வாங்கவில்லை. பாலாஜியை வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருந்தாலும் பரவாயில்லை. கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். மீண்டும் போஸ்டிங் வாங்குவதற்கு அவர் பெரும்பாடு பட வேண்டும். நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி பழிவாங்கப்பட்டு இருக்கிறார். அதனால் நேர்மையான அதிகாரிகள் இனி, ஆளும் கட்சிக்காரர்களைக் கண்டு பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது'' என்று வருத்தப்பட்டனர்.
எந்த ஒரு காரியத்துக்காக கலெக்டர் பாலாஜி முழு மூச்சுடன் செயல்பட்டாரோ, அது நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை. ஆம், சத்துணவு அமைப்பாளர்களால் வேலைக்குச் சேர முடியவில்லை. 'இவர்கள் தரும் நியமன உத்தரவு களை வாங்க வேண்டாம்’ என்று, மேலிடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போயிருக்கிறதாம். 'சென்னை கவுன்சிலர்களிடம் சீறிய முதலமைச்சருக்கு, விருதுநகரில் மட்டும் அல்ல.. மாநிலம் முழுவதுமே சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் நடக்கும் நெறிமுறை மீறல் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. 'வாய்மையே வெல்லும்’ என்பது விளம்பரத்துக்கு மட்டும்தானா?
- எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்
Thanks to Vikatan
Source: http://www.vikatan.com/article.php?page=2&mid=2&sid=577&aid=21254&type=all#cmt140200
Please join and support the cause in our facebook page, let this initative be the first in terms of opposing the politicians.
திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்
ரத்தக் கசிவை நிறுத்தும் செயற்கை ரத்த அணுக்கள்!
ப்ரான் மேங்கோ கறி
மட்டன் வெள்ளை குருமா
கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?
Chettinadu Fish Curry: செட்டி நாட்டு மீன் குழம்பு
பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’!
Re: [New post] டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?
Breast Feeding and Importance to Mom's: தாய்ப்பால் தாய்க்குப் புதிய நன்மை
When Filling up the Insurance Paper: காப்பீட்டுப் படிவத்தை நிரப்பும்போது
Amla can Cure Heart Disease: இதய நோய் தீர்க்கும் நெல்லிக்கனி
Billa 2: Mp3 Songs, Lyrics, Download Links
Billa 2 Song Details
Gangster - Yuvan Shankar Raja and StefnyIdhayam - Shweta Pandit
Yedho Mayakkam - Yuvan Shankar Raja, Tanvi Shah and Suvi Suresh
Madurai Ponnu - Andrea Jeremiah
Unakkulle Mirugam - Ranjith
Theme Music
Billa 2 Track Details
Movie | Billa 2 |
---|---|
Release Dare | 1 May 2012 |
Genre | Tamil film soundtrack |
Language | Tamil |
Released By | Sony Music Entertainment |
Composer | Yuvan Shankar Raja |
The Links for Downloading the song's will be ubdated soon with the Billa 2 Lyrics in our blog page.
Indonesian Mutual Funds: Positive Sentiment Spurs on 2012
The economy last year grew 6.5 percent, the fastest pace since 1996, and that helped to lift average per capita income to $3,500 from $3,000 in 2010 — elevating many of the country's 240 million people into the middle class.
"Per capita income has increased to more than $3,000 now, so there are more people wanting to invest," Abiprayadi Riyanto, the APRDI chairman, said on Tuesday. Investments in Indonesian Mutual Funds start as low as Rp 100,000, he added.
Assets in the Indonesian Mutual Funds industry may rise by 10 percent to 15 percent this year, "as long as the conditions in Europe are improving," Abipriyadi said.
மனைவிக்கு, கணவர் கொடுக்கும் பரிசு
Balance Transfer on Credit Card's: கிரெடிட் கார்டு `நிலுவை மாற்றம்’ பற்றித் தெரியுமா?
Post Delivery: பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!
For a nice Body கட்டுடலுக்கு…
Be Cool in Summer: கோடையில் `கூல்’ ஆகலாம்!
Spicy Vegetable: ஸ்பைசி வெஜிடபிள்
Summer Vacation Tips: கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறீர்களா?
Are you a Sentiment Women: `சென்டிமென்ட்’ பெண்ணா நீங்கள்?
Tamil movie songs
எங்கள் G+
விளம்பரதாரர்
வலைப்பூ பெட்டகம்
-
▼
2012
(
73
)
-
►
June
(
10
)
- ரத்தக் கசிவை நிறுத்தும் செயற்கை ரத்த அணுக்கள்!
- ப்ரான் மேங்கோ கறி
- மட்டன் வெள்ளை குருமா
- கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?
- Chettinadu Fish Curry: செட்டி நாட்டு மீன் குழம்பு
- பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’!
- Re: [New post] டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?
- Breast Feeding and Importance to Mom's: தாய்ப்பால்...
- When Filling up the Insurance Paper: காப்பீட்டுப் ...
- Amla can Cure Heart Disease: இதய நோய் தீர்க்கும் ந...
-
►
April
(
35
)
- Billa 2: Mp3 Songs, Lyrics, Download Links
- Indonesian Mutual Funds: Positive Sentiment Spurs ...
- Orkut Proxies for 25.04.2012
- Facebook Proxies for 25.04.2012
- மனைவிக்கு, கணவர் கொடுக்கும் பரிசு
- Balance Transfer on Credit Card's: கிரெடிட் கார்டு...
- Post Delivery: பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!
- For a nice Body கட்டுடலுக்கு…
- Be Cool in Summer: கோடையில் `கூல்’ ஆகலாம்!
- Spicy Vegetable: ஸ்பைசி வெஜிடபிள்
- Summer Vacation Tips: கோடை விடுமுறையில் ஊருக்குப் ...
- Are you a Sentiment Women: `சென்டிமென்ட்’ பெண்ணா ந...
-
►
June
(
10
)